Search This Blog

Friday, October 8, 2010

நாடகமே உலகம் (1)

எங்கள் நிறுவனத்தில் ஒரு தொழிலாளர் விடுமுறைக்கு செல்ல அவர் நடத்திய நாடகங்களே இந்த பதிவு .

இந்த நாடகத்தின் கதாநாயகனின் பெயர் ராமர் . எங்கள் நிறுவனத்தில் தொழிளார்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மாதம் விடுமுறை கொடுப்பது விதிமுறையாக உள்ளது. இரண்டு வருடத்திற்கு விமான டிக்கெட் இரு வழிக்கும் கொடுப்பது உண்டு. நம் நாயகன் விடுமுறைக்கு சென்று திரும்பி வந்து ஒரு வருடம் ஆனவுடன் மீண்டும் விடுமுறை கேட்டார் , நான் அது இப்போ அனுமதிக்க முடியாது என்று கூறினேன் . 
ஒரு மூன்று மாதம் சென்றதும் நான் அவரிடம் ஊருக்கு போகணும் என்று சொன்னிங்க இல்லையா  இப்போ போய்கிட்டு வரீங்களா என்று கேட்டேன் . அவர் சொன்னார் நிறைய கடன் இருக்கிறது இப்போ போகவில்லை என்றார். இப்போ சென்றால் ஒரு வழி டிக்கெட் எடுக்கணும் திரும்பவும் கடன் கூடும் என்றார். 
அடுத்த நாள் காலையில் ஏன் கைபேசியில் அழைத்தார் அவர் சித்தப்பா உடம்புக்கு முடியாமல் ரெம்ப சீரியசாக உள்ளதாக கூறி உடனே செல்ல வேண்டும் என்று கூறினார்.நான் பாக்கலாம் என்று கூறினேன் .ஒரு இரண்டு மணி நேரம் சென்றதும் மீண்டும் அழைத்தார் சித்தப்பா இறந்து விட்டார் ,நான் சென்றாலே அடக்கம் செய்வார்கள் உடனே செல்ல வேண்டும் என்றார் ,எனக்கு ஒரு சந்தேகம்.முன்பு விடுமுறைக்கு செல்லும் போது ஊரில் உள்ள தொலைபேசி எண் கொடுத்திருந்தார் .அந்த எண்ணிற்கு அழைத்தேன் ,அவர் இல்லாள் போன் எடுத்தார் ,அவரிடம் ஊரில் எதாவது பிரச்சனை உள்ளதா என்று கேட்டேன் அவர் ஒன்றுமில்லை என்றார் .
நம் நாயகன் இப்போ கைபேசியில் திரும்பவும் அழைத்தார் ,நான் எடுக்க வில்லை ,அவர் திரும்பி அழைக்கவும் இல்லை.அடுத்த நாள் பணிக்கு வரும் போது கேட்டேன் ,அடக்கம் முடிந்து விட்டதா என்று .அவர் சிரித்து விட்டு சென்று விட்டார் . 

அடுத்த காட்சி அடுத்த பதிவில்   .

Friday, September 10, 2010

சிக்கன் உப்புமா


என்ன தலைபே   வித்தியாசமாக இருகிறதா .

நான் இதை செய்ய வேண்டி வந்த சந்தர்பமும் வித்தியாசமானது.

நேற்று மாலை நேர உணவிற்காக இஞ்சி சிக்கன் ட்ரை  செய்தேன் .
மணம் ,நிறம் எல்லாம் நன்றாக இருந்தது . நானும் என் சக நண்பரும் சாப்பிட இருந்தோம்.
வாயில் வைத்த போது சாப்பிட முடிய வில்லை. உப்பு அதிகம் ஆயுடுச்சு .

என்ன செய்ய ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு  விட்டு ,மீதமானதை நாளை எதாவது செய்யலாம் என்று வைத்து விட்டோம்.

காலை எழுந்து குளித்து  விட்டு டிபன் செய்ய யோசித்தேன் .
சிக்கனை எதாவது செய்ய எண்ணினேன் .அப்போது கண்ணில் பட்டது ரவை.
சரி இந்த ரெண்டையும் சேர்த்து கலக்கினால் என்ன என்று தோன்றியது.
உடனே செயலில் இறங்கினேன் .

அந்த மீதமான சிக்கனில் ரெண்டு தம்ளர் வெள்ளம் சேர்த்தேன் .
ஒரு வெங்காயம் நறுக்கி சேர்த்து கொதிக்க வைத்தேன் .
நன்றாக கொதித்ததும் அதில் ரவை சேர்த்து நன்றாக கிளறி ,கறிவேப்பிலை சேர்த்து இறக்கினேன் .
சுவையான ' சிக்கன் உப்புமா' ரெடி.

ரெம்ப நன்றாக இருந்தது.



Thursday, September 9, 2010

மீன் குழம்பு

மீன் குழம்பு

இது நான் நேற்று இரவு செய்து பார்த்தது , நன்றாக இருந்ததால் பதிவு இடுகிறேன் .
எல்லோரும் செய்து பாருங்கள்.

சேர்வைகள்
அ. தக்காளி - 2  (நடுத்தரம் )
ஆ. வெங்காயம் - 2  (பெரிது)
இ.   பூண்டு - 4 விழுது
ஈ . இஞ்சி - ஒரு சிறிய துண்டு .
உ.  பச்சை மிளகாய் - 4
ஊ.    மல்லி பொடி - 2 மேஜை கரண்டி
  எ. மிளகாய் பொடி - 3  மேஜை கரண்டி
ஏ.  மஞ்சள் பொடி - ௧  மேஜை கரண்டி
ஐ . பெருங்காய  தூள் .
ஒ . எண்ணெய் ,உப்பு,கறிவேப்பிலை,புளி - தேவையான அளவு .

மீன் அரை கிலோ எடுத்துகோங்க - சுறா மீன் துண்டுகளாக இருந்தால் நல்லது,அல்லது எதாவது பெரிய மீன் துண்டுகளாக இருந்தாலும் சரி .

செய்முறை.

வெங்காயம்,பூண்டு,இஞ்சி,தக்காளி  ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டங்களாக வெட்டி கொள்ளவும்.
புளியை நீர் விட்டு கரைத்து  கொள்ளவும் .

சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதங்கியதும் , வெங்காயம் சேர்க்கவும் .
வெங்காயம் கண்ணாடி மாதிரி ஆனதும் தக்காளி சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும்.
தக்காளி மசியும் அழவு வெந்ததும் ,நன்றாக கிளறி அதில் எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறவும் .
எண்ணெய் தனியாக பிரியும் போது ,மீன் துண்டங்களை போடவும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள புளி நீரையும் சேர்த்து ,கொதித்ததும் இறக்கி விடவும்.
பின்னர் கறிவேப்பிலையை சேர்த்து மூடி வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.

Monday, September 6, 2010

ஒன்னுமே புரியல ....... இந்த பாரதத்திலே





ஏழைமக்களுக்கு இலவசமாக தானியங்களை கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை நடைமுறைப்படுத்த முடியாது. நாட்டில் 37 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்குவது என்பது முடியாத காரியம். அரசின் கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட் தலையிடக்கூடாது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு ‌கொடுத்து விட வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(அய்யா, மன்மோகன் சிங் அவர்களே, சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லுதுன்னா , அதிகமா வீணாக போகும் உணவு பொருளை ஏழை மக்களுக்கு இலவசமா கொடுங்க அப்படினுதான் ,,37% சதவீத மக்கள் எல்லோருக்கும் கொடுக்க சொல்லவில்லை. எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு கொடுங்க போதும் . நீங்க என்ன அதிரடியா பேட்டி எல்லாம் கொடுக்க வேணாம்,).





தொழிற்கூடங்கள் சுற்றுசூழலுக்கு கெடுதல் இல்லாத அளவில் அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் வறுமைகள் ஒழிக்கப்படுவது மூலம் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்று சொல்ல முடியாது.
இவ்வாறு பிரதமர் கூறினார்.

(இதன் மூலம் என்ன சொல்ல வராருன்னு  புரியல , தொழில் கூடங்கள் அமைக்க படுமுனு சொல்ரார  இல்ல அமைக்க படாதுன்னு சொல்ல வர்றார  !!! ஒன்னுமே புரியல..)


ஒன்னுமே புரியல ....... இந்த பாரதத்திலே ............


கேள்வி 1. 
37 %  வறுமை கோட்டுக்கு கீழ் என்றால்  , அரசு அவர்களை முன்னேற்ற என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறது. 


கேள்வி 2   .
இத்தனை மக்கள் பட்டினியில் உள்ள போது  இவர்களுக்கு சேவை செய்யும் நாடாளுமன்ற உறுபினர்களுக்கு இப்போது எதற்கு சம்பள உயர்வு,.



Sunday, September 5, 2010

சலனம்



ஒரு வெள்ளிகிழமை விடுமுறை நாள். 




அவன் இவனிடம் ' மார்க்கெட் வரை சென்று சில சாமான் வாங்க வேண்டும் போகலாமா' 


'ஏன் டா விடுமுறை நாளில் எல்லாம் வெளியே வர மாட்டேன் தெரியுமுல்லா உனக்கு'

'இல்லப்பா ஊருக்கு போகணும் சில சாமான் வாங்கலாம் என்று நினைச்சேன் '

'ஏய் சும்மா கம்ம்னு கெட உயிரை எடுக்காத '


'இப்போ வர போறியா  இல்லையா '


'சரி சொன்ன கேக்கவா போற , ஆனா ஒரு கண்டிசன் '


'என்ன சொல்லி தொலை'


'இந்த வெயிலில்   நடக்க எல்லாம் முடியாது , டாக்ஸி ல போகலாம்'


'ஏன் இந்த ஒரு கிலோமீட்டர்  துரத்திற்கு டாக்ஸி வைக்கணுமா'


'டாக்ஸி வைக்கிறதா இருந்தா வரேன் '


'சரி வந்து தொலை'


இருவரும் ரோட்டை அடைந்து டாக்ஸி யை எதிர்நோக்குகிறார்கள்.


இவன் அவனிடம் ' சரி நடக்கலாம் '


'ஏன் நடக்க எல்லாம் முடியாது டாக்ஸி வேணும் என்னு சொன்னே '


'இல்ல அங்க பாரு ஒரு பிகர் நடந்து போகுது அது தான் நடக்கலாமே என்று பார்தேன்'


அவனும் திரும்பி பார்த்தான், 


ஒரு நல்ல பிகர் ,சுமார் ஐந்து அடி உயரமுள்ள philipino  பிகர் ,
நம்ம பாசையில் சொல்லணும் என்றால் ' நாட்டு கட்டை' நல்ல கும்முன்னு இருந்தது.
விரித்த தலை முடி தோள் வரை படர்ந்து இருந்தது .' t -shirt'  மற்றும் முட்டு வரை காலோடு ஒட்டியுள்ள ஒரு கால்சட்டை யும் அணிந்து இருந்தது.
  
'ம் ம் இப்போ வெயில் எல்லாம் ஒன்னும் செய்யாது உனக்கு '


'இல்லப்பா பாரேன் நல்ல பிகர் , '


இருவரும் நடையை எட்டி போட்டார்கள்.

'நல்ல பிகர் , பின்னழகு அற்புதம், நல்ல philipines பிகர் '


'எப்படியவது முகத்தை பார்க்க வேண்டும் எட்டி நட '


இருவரும் வேகத்தை கூட்டி நடந்தார்கள், ஆனால் அதை பிடிக்க முடியவில்லை .


அவர்களும் விடாமல் தொடர்ந்தார்கள் .


அதுவும் அவர்கள் செல்ல வேண்டிய 'மால் ' உள்ளே சென்றது.


இவர்களும் எப்படியாவது முகத்தை பார்த்து விடுவது என்று உள்ளே சென்றனர் .


அது 'trolley '  எடுக்க திரும்பியது .


இவர்கள் அதன் முகத்தை பார்த்தார்கள் . 
  
???????????????????????????????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இவர்கள் முகம் 'இஞ்சி தின்ன குரங்கானது '[


அது ஒரு philipine ஆண் .


இவன் அவனிடம் 'இது தான் உன் கூட வெளியே வரமாட்டேன் என்று  சொல்றது ,உன் கூட வந்தாலே இப்படி தான் நடக்குது'.






  

Monday, August 30, 2010

இதை கொஞ்சம் கேளுங்க

Enga Area 031Album Name : Enga Area 031
Year : 2009
Banner : RH Crew
Artist : Robin, Siva, Hari, Ajay
Lyrics : Ajay. Hari[English Rap]
Concept n Developed : Rare House
Producers : Robin, Hari, Siva Black Fiction
Mixed n Mastered : Christo Peiris, Gihen Nishan at Music Village

http://mp3.tamilwire.com/enga-area-031.html
Kadhale – Hari, Robin, Siva.mp3

இதை கொஞ்சம் சிரமம் பார்க்காமல்  கேளுங்க.
இதோட வரிகளும் இசையும் எனக்கு பிடித்திருக்கிறது உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறன்  .

பிடித்து இருந்தால் ஒட்டு போடவும்.
விமர்சங்களும் வரவேற்க படுகின்றன .

வாங்க வந்து நல்ல பெயர் வையுங்க .......please

இது ஒரு சிக்கன் கறி. பெயர் என்ன என்று கேக்க கூடாது.அது நீங்க தான் வைக்கணும் .

என்னை மாதிரி உள்ள ஒன்டிகட்டைகளின் சமையல் கலை ,எப்படி இருக்குனு சொல்லுங்க  .

சரி என்  புராணத்தை ஏன் பாடுவேன் ,சரி சமையல் கூடத்திற்கு செல்லலாம் ,

இதற்கு வேண்டிய சேர்வைகள்.

1 கண்டிப்பா சிக்கன் வேணும் ,ம்... ஒரு கிலோ எடுத்துகோங்க  
2    வெங்காயம்  நடுதரத்தில் - 3
3  தக்காளி நடுதரத்தில் - 2
4     தேங்காய் துருவல் - அரை மூடி
5    மிளகாய் வத்தல் பொடி- 3 டி ஸ்பூன் 
6   நல்ல மிளகு பொடி - அரை டி ஸ்பூன் 
7  மஞ்சள் பொடி - 1 டி ஸ்பூன் 
8    மல்லி பொடி - 3 டி ஸ்பூன் 
9  கரம் மசாலா பொடி - 2 டி ஸ்பூன் 
10   உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.


இனி முதல் கட்டமாக  செய்ய வேண்டியவை 

வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
தக்காளியை சிறு துண்டங்களாக வெட்டி கொள்ளவும்.
தேங்காய் துருவலை நன்றாக மிக்சியில் அறைத்து கொள்ளவும்.
எல்லா பொடி வகைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு வாணலியில்  வறுத்து தனியாக வைக்கவும்.வறுக்கும் போது கவனிக்கவும் கருகி போய் விட கூடாது ,நல்ல மணம் வரும் போது நிறுத்தி விடவும்.

இரண்டாம் கட்டம் .

அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி ,சூடானதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும் .
சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளியையும் உடன் உப்பையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் ,சிக்கன் சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும் ,தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.
சிக்கன் ஓரளவு வெந்ததும் வறுத்து வைத்திருக்கும் மசாலா பொடிகளை சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும் .
நன்றாக வெந்ததும் ,அறைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
பத்து நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
தேவை என்றால் சிறிது கறி வேப்பிலையோ ,மல்லி இலையோ சேர்த்து பரிமாறவும்  .


நீங்களும் சமைத்து பார்த்து விட்டு ,இந்த பதார்த்தத்திற்கு ஒரு நல்ல பெயர் இடவும்.

வாங்க வந்து நல்ல பெயர் வையுங்க ........

 .

Friday, August 20, 2010

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

மாத சம்பளம் 12,000

மாத தனி செலவு  
10,000

அலுவலக மாத செலவு  
14,000

பயண படி (Rs. 8 per km) 
48,000
( எ. க சென்னை முதல் தில்லி ஒரு முறை யாத்திரை செல்ல 6000 கே/மி  ) 

கூட்டதொடறுக்கான  தினப்படி  
:500/day
தொடர்வண்டி முதல் வகுப்பு பயணம் முற்றிலும் இலவசம் .எத்தனை முறை எங்கு சென்றாலும்.
முதல் வகுப்பு விமான பயணம் :வருடத்திற்கு நாற்பது பயணம் ஒரு துணைவருடன்  .
தில்லியில் காஸ்டல் வாடகை முற்றிலும் இலவசம். 
மின் கட்டணம் ஒரு மாதம் :  50,000 units 
லோக்கல் தொலைபசி இலவசம்  1 ,70,000 அழைப்புகள் .
மொத்த செலவு வருடத்திற்கு 32,00,000 [ i.e. 2.66 இலச்சம் /மாதம் ]
மொத்த ஐந்து வருட செலவு  
1,60,00,000 


இப்போ இது போதாது என்று மாத சம்பளத்தை என்பது ஆயிரமாக உயர்த்த ஏற்பாடு செய்து விட்டார்கள் அதுவும் முன் தேதி இட்டு. 
எனக்கு ஒரு சந்தேகம் அப்போ பதிரெண்டு ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டிருக்கின்ற எல்லா பணியாளர்களுக்கும் என்பது ஆயிரமாக உயர்த்தி தருவார்களோ .?????????........................
இதை விட கொடுமை இவர்கள் பணியாளர்களே இல்லை ,இவர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்கள் . 

Thursday, August 19, 2010

குழந்தைகள் இருப்பவர்கள் கவனிக்கவும்

இன்று பணி முடிந்து வீட்டிற்கு taxi யில் திரும்பி கொண்டுயிருந்தேன் ,எப்படியும் டாக்ஸி குறைந்தது அறுபது கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது .அமீரகத்தில் உள்ள சாலைகளை பற்றி பதிவர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன் .திடீரென நடு    ரோட்டில் பிரேக் இட்டு நிறுத்தி  வண்டியை விட்டு இறங்கி ஓடினார் .என்னடா என்று பார்த்தால் ரோட்டில் ஒரு சிறு பையன் குறுக்காக ஓடுகிறான் ,இரண்டு வயது இருக்கும் .எதை பத்தியும் கவலை படவில்லை அவன் .சாலை என்றால் சிறிய சாலை இல்லை ,மொத்தம் நான்கு வழி சாலை .நான் வந்த  டாக்ஸி டிரைவர் அப்புறத்து எதிர் திசையில்  வந்த வண்டிகளை கை கட்டி நிறுத்தினார் ,இல்லை என்றால்  ஒரு விபத்து உறுதியாக நடந்திருக்கும்.
சம்பவம் என்னவென்றால் அப்பையனின் தகப்பன் சாலையின் ஒரு கரையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் வண்டியில் பையனை வைத்து விட்டு ,மறு கரையில் உள்ள கடையில் சமான் வாங்க சாலையை கடந்து சென்று உள்ளார் .அதை பார்த்த சிறுவன் கதவை திறந்து கடகட வன சாலையை கடந்துள்ளான்.
தவறை அவர் மீது வைத்து விட்டு ,அவர் அந்த சிறுவனை சாத்தினார்,என்ன மனிதர் அவர் .
எனவே பதிவர்களே  உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் கவனம் தேவை. வாகனத்தில் விட்டு சென்றால் மறக்காமல் லாக் செய்து செல்லவும் .எப்போதும் child lock setup செய்து வைக்கவும் .

.

Wednesday, August 18, 2010

என்ன கொடுமை சார் இது

என் நிறுவனத்தில் உள்ள சில சுவையான  கதாபாத்திரங்கள் பற்றி ஒரு தொடர் பதிவு.

அவன் நன்றாக பேசுவான் .உங்களிடம் பேசும் போது ,நிறுவனத்தில் உங்களை விட வேறு நல்லவர்கள் ,வல்லவர்கள் ,மென்மையானவர்கள் கிடையாது என்ற ரீதியில் பேசுவான் .
அவன் பேசுவதில் வீழ்ந்து விட்டால் அவ்வளவுதான் ,தலையில் நன்றாக மிளகாய்  அரைத்து விடுவான் . 

எப்படியாவது எனக்கு ஆயிரம் டிர்ஹம் வேணும் ,கண்டிப்பா அடுத்த மாதம் சம்பளம் கிடைத்தவுடன் தந்து விடுவேன் ,இப்படி கூறி என்னிடம் காசு கேட்டான் ஒருவன் .நானும் பிடி குடுக்காமல் டிமிக்கி குடுத்து வந்தேன் .ஆனால்  அவன் விட வில்லை ,தினமும் அலுவலகம் சென்றவுடன் ,எப்படியாவது இன்று ஏற்பாடு செய்து கொடு என்று ஒரே நச்சரிப்பு . அலுவலகத்தில் எல்லோரும் எதோ நான் அவனுக்கு காசு குடுக்க வேண்டும் என்று எண்ணி விட்டார்கள் .
என்ன செய்ய ஏழரை சனி யாரை விட்டது .அந்த கொடுமை தாங்காமல் அவனுக்கு அருனுறு திர்கம் கொடுத்தேன் ,ஒரு மாதத்தில் திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையோடு . ம்ம் கடந்து விட்டது ஆறு மாதம். காசு திரும்ப வர வில்லை.
எப்போ திரும்ப கேட்டல், அவன் கூறும் காரணங்களை கேட்டால் ,தலை சுத்துகிறது.அவனிடம் காசு திரும்ப கேட்டு நொந்து பொய் விட்டேன் .அவன் திரும்ப தர முடியாததற்கு  சொல்லும் காரணங்கள் 
# சம்பளம் முழுவதும் கிடைக்கவில்லை
(அங்கும் கடன் வாங்கி இருந்த எப்படி கிடைக்கும்).
# மகளுக்கு உடம்பிற்கு முடியவில்லை .
(இது எல்லாம்  ஒரு காரணமா யா )
# ஊர்ல மச்சினிக்கு கல்யாணம் 
(அதுக்கும் இதுக்கும் என்னையா சம்பந்தம் ).
# அண்ணன் இப்போ தான் ஊர்ல இருந்து  வந்தாரு
(யோவ் அதுக்கு நான் என்னையா பண்ண முடியும் ).
# உங்களுக்கு வேண்டி வச்சிருந்தேன் ,இப்போ தான் ஒருத்தன் உடம்புக்கு  முடியலன்னு வாங்கி கிட்டு போனான்
(எனக்கு வச்சிருந்தத நீ எப்படியா அவனுக்கு குடுப்ப ).

இத விட இப்போ ஒரு கொடுமை நடந்தது ,நீ எப்படி கண்ட இடத்தில வச்சி எல்லாம் காசு கேக்குற என்று. ஒரு நாள் ராத்திரி கேட்டா ,நீ ஏன் என் கிட்ட கேக்குற ,நிறுவன கணக்காளர் கிட்ட போய் கேளு அவரு குடுபரு .என்ன கொடுமை சார் இது இவன் கிட்ட காசு குடுத்து கிட்டு ,நான் அவனிடன் கேட்க வேண்டுமாம்   .


இது ஒரு எடுத்து காட்டு தான் .இன்னும் இவனை மாதிரி நான்கு ஐந்து பேர் உள்ளனர் .
அவர்களை பற்றி அடுத்த பதிவு.



Thursday, August 12, 2010

நேரமில்லை

அன்று மனிதனிடம் இயந்திரம் இல்லை,வாகனமில்லை, ஆனால் குடும்பத்துடன் செலவிட நிறைய நேரம் இருந்தது.எங்கள் ஊரில் இருந்து உவரி ,திருசெந்தூர் முதலிய திருதலன்களுக்கு , முன்பு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செல்வர்கள்.அங்கு செல்ல குறைத்து அரை நாள் பிடிக்கும் .அப்போது பல இடங்களில் உள்ள உறவினர்கள் எல்லாம்  அங்கு வந்து சேர்ந்து விடுவார்கள். பின்னர் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கி ஒன்றாக சமைத்து உண்டு ,உறவு கதைகள் எல்லாம் கதைத்து திரும்புவார்கள்.ஆனால் இன்று அவ்விடங்களுக்கு இரண்டு மணி நேரத்தில் செல்ல முடிகிறது ஆனால் உறவினர்களை மட்டும் காண முடியவில்லை.
அதை விடுங்க இப்போ என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திருமணம் வருகிறது.ஆனால் என்னால் செல்ல முடியும் என்று தோணவில்லை .அதை கூட விடுங்க ,எனக்கு என் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேச கூட நேரம் இல்லை.அதை விட முக்கியம் என் உடன் பிறந்தவர்களை காண கூட நேரம் இல்லை.நான் வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்கு செல்லும் போது அவர்களுக்கு விடுமுறை கிடைப்பதில்லை .
என்ன செய்ய, மனிதன் எத்தனை வேகமாக செல்ல வாகனம் கண்டுபிடித்தாலும் ,எத்தனை வேகமாக ஒரு இடம் விட்டு ஒரு இடம் செல்ல முடித்தாலும் ,எப்ப்போதும் எல்லோரிடமும் கேட்க முடிகின்ற ஒரு வார்த்தை " நேரமில்லை".

அன்று எத்தனை மெதுவாக யாத்திரை செல்ல முடிந்தாலும் எல்லோரிடமும் நல்லது கேட்டதுக்கு சென்று வர நேரமிருந்தது .
இன்று எத்தனை விரைவாக யாத்திரை  செல்ல முடித்தாலும் ,எல்லோரும் சொல்வது நல்லது கேட்டதுக்கு செல்ல நேரமில்லை .

என்று இந்த நேரம் எல்லாம் எங்கு சென்றதோ தெரிய வில்லை.
அது மட்டுமில்லை எனக்கு பதிவு வாசிக்கவும் ,பின்னுட்டமிடவும் ஏன் பதிவு  எழுதவும் கூட "நேரமில்லை".

Tuesday, August 3, 2010

ஏக்கம்

.
.
.
.
.










சிறு வயதில் நீச்சல் பயின்றது.
கோடையில் மீன்பிடித்த சாகசம்.
மாலையில் காற்று வாங்கிய
சந்தோச அனுபவம் .
வறண்ட போது மைதானம் ஆனது .
எல்லாம் என் நினைவில் இன்று.
என் டெஸ்க்டாப் பின்புலமாக பார்கைலே !

Sunday, August 1, 2010

விமானத்தில் பயனிப்பவரா நீங்கள்

ஏர் இந்தியா விமானத்தில் பயண முன் பதிவு செய்துள்ளவரா நீங்கள், அப்படி என்றால் பின் வரும் முன் ஏற்பாடுகள் மற்றும் தகுதியுடன் பயணம் செல்லவும்.
* இரண்டு நாட்கள் உண்ணா நோன்பு இருக்கும் உடற்தகுதி வேண்டும்.
* கட்டு சோறு உண்ணும் பழக்கம் உண்டு என்றால் கட்டு சோறு எடுத்து செல்லவும்.
* உங்களை வரவேற்க உறவினர்கள் வருவார்கள் என்றால் 'கரவன்' வாடகைக்கு எடுத்து வர சொல்லவும்.
* பாடி ஸ்ப்ரே மறக்காது எடுத்து செல்லவும் .
* காற்றில் பறக்கும் வித்தையும் பயிலவும்.ஏன் என்றால் விமானம் பறக்கும் போது டுட்டி சமயம் முடிந்து விட்டால் விமானிகள் இறங்கி சென்று விடுவார்கள்.

தங்கள் பயணம் நல்ல பயணமாக அமைய வாழ்த்துக்கள் .

பின் குறிப்பு : யாருக்காவது வேற நல்ல முன் ஏற்பாடுகள் தோன்றினால் எழுதவும்.

Monday, July 26, 2010

தொலைந்த முகங்கள்

இந்த அரபு நாட்டுக்கு வந்த பிறகு நிறைய மனிதர்கள் வாழ்கையில் மின்னல் மாதிரி வந்து மறையாத நினைவுகளை தந்து மின்னல் மாதிரி மறைத்து போனவர்கள் ஏராளம் .அவர்களை பத்தி ஒரு நினைவு கூறல் .
முதலில் 'கணபதி 'யை பத்தி சொல்லியாகனும்,ஒரு தஞ்சைகாரன் . அரபு நாட்டு கம்பெனி எப்படி இருக்கும் என்று தெரியாமல் ஒரு எதிர்பார்போடு கம்பனியில் காலடி எடுத்து வைத்தால் ,'தமிழா ' என கேட்டு ஒரு குரல் .அது தான் கணபதி .ஏய் ஒரு தமிழ் ஆள் ,ரெம்ப சந்தோசம் அவனுக்கு இரண்டு வருசமா தமிழ் ஆளுங்க இல்லாத கம்பனியில் ஒருத்தனை பார்த்ததும் .பின்னர் நாங்கள் ரெம்ப நெருக்கம் ஆகிற்றோம் . பின் அவன் ஒரு எதிர்பாரத விபத்தால் திரும்ப அரபு நாடு வர முடியாமல் ஆகிற்று.
அடுத்து 'ஷஹாப் அஹ்மத் ' என்று ஒரு பாகிஸ்தானி மெக்கனிக்கல் எஞ்சினியர் . ஆளை கண்டால் ஒரு 'சுமோ' வீரரை போல் இருப்பர் . அறுபது வயதானவர் ,ஆனால் ரெம்ப அக்டிவ் . அரபு நாட்டில் நாற்பது வருடமாக இருப்பவர் .அவரும் ஒரு விபத்தில் சிக்கி கை கால் செயல்படாமல் நாடு திரும்பி விட்டார்.
அடுத்து 'காசிம் ' இவறும் ஒரு பாகிஸ்தானி .நல்ல வாகன ஓட்டுனர் ,ஆனால் இவறும் ஒரு சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார் .
அடுத்து 'ஹம் பகதூர் ' ஒரு நேபாளி .கம்பெனி ஆபீஸ் பாய் .அவன் நாட்டுக்கு சென்றவன் திரும்ப வரவில்லை.
அடுத்து எங்கள் ரூமில் தங்கியிருந்த 'மோகன்தாஸ் ' ,ஒரு கப்பல் கப்டன் ,இவறும் ஒரு வழக்கில் சிக்கியதால் திரும்ப வர முடியவில்லை .
அடுத்து 'ஹபிப் ரஹ்மான் 'ஒரு பாகிஸ்தானி வாகன ஒட்டி ,இவரை பற்றியும் நிறைய சொல்லலாம் . ஹிந்தி என்னவென்று தெரியாமல் இருந்த என்னை ,ஓரளவு தத்தி பித்தி பேச வைத்தவன் .அவனும் இப்போ எங்கே என தெரியவில்லை .
பின்னர் 'ராஜன் ,அர்ஜுன்,சுரேஷ் ,சுகதன் ,சந்தோஷ் மற்றும் நிறைய பலர்.
நான் இப்போ ஒன்றை பற்றி மட்டும் நினைக்கிறன் , எங்கோ பிறந்து ,எங்கோ வளர்ந்து ,ஒன்றாக வெவேறு களத்தில் பணிபுரித்து ,நம் மனதில் மட்டும் மறையாமல் செய்தது எது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.யாராவது புரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் .

Sunday, July 25, 2010

தேர்வு,குழந்தை பிறப்பு ,இயற்கை பேரிடர் .

இரண்டு தினமாக நிறுவனத்தில் வாங்கி கட்டி கொள்ள வேண்டியதாக போச்சு .
இந்த 'பொலிடிக்ஸ் ' செய்கிற ஆட்களால் மன நிம்மதியே போச்சு . மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் துவண்டு போய் நேற்று மாலை உண்ணவும் இல்லை , இரவு இரண்டு மணி வரை உறங்கவும் இல்லை .பின் எப்படியோ உறங்கி போனேன் . தூக்கத்தில் ஒரு கனவு ,முழு சாரமும் நினைவில் இல்லை இருந்தாலும் விழிப்பு வந்தவுடன் ஒரேஒரு வாக்கியம் மாத்திரம் நினைவு 'இரண்டு தினத்தில் பரீட்சை ரிசல்ட் ஏன் பயப்படவேண்டும் '. சரி ஒரு கலக்கத்தில் இன்று ஆபீஸ் போயாச்சு .திரும்பவும் அதே பிரச்சனை .நிம்மதி இன்றி மதியம் ஆபீஸ் செல்ல வில்லை. ரூமில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு ஒரு சிறிய உறக்கம் , திரும்பவும் கனவு ,இப்போது ஒரு குழந்தை பிறப்பும், நான் தங்கி இருக்கும் அஜ்மானில் ஒரு கொடுன்மழையும் சுறாவளி காற்றும்.முழிப்பு வந்ததும் அந்த கனவும் ஏதோ சொல்ல வருவது போல் தோணியது (தோன்றியது) .உலகில் இப்படி பல பேரிடர்கள் இருக்கும் போது , வாழ்கையில் இந்த சிறிய கஷ்டத்தை நேரிடராவிடில் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்வது போல் இருந்தது.
உடனே எல்லாம் சரியாகும் என்ற எண்ணத்தோடு ,இதை ஒரு பதியமாக போட்டு விடலாம் என்று உடனே எழுதி விட்டேன் .

Thursday, July 15, 2010

பெட்ரோல் விலையில் மத்திய அரசின் முரண்பாடு

பெட்ரோல் விலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மக்கள் விரோதமாக உள்ளது .முதலில் பதினைத்து நாட்களுக்கு ஒரு முறை சீரமைக்க படும் என்று கூறிய அரசு எப்போது எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் மறு சீரமைப்பு கூட்டத்தை மாதம் ஒரு முறை என்று மாற்றி உள்ளது . தற்போது கச்சா எண்ணையின் விலை சர்வதேச மதிப்பில் குறைத்து உள்ளது.தற்போது விலை சீரமைத்தால் பெட்ரோல் விலை குறைக்க வேண்டி வரும். தற்போது ஏழு டாலர் பேரல் ஒன்றுக்கு குறைத்துள்ளது .இனியும் குறைய வாய்ப்பு உள்ளது .மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் சேர்ந்து இன்னும் பதினைத்து நாட்களுக்கு மக்களை கொள்ளை அடிக்க மத்திய அரசு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் நலம் எந்த அரசியல் கட்சிக்கும் முக்கியம் இல்லை.

மக்கள் என்ன செய்வார்கள் ,அவர்களால் தனியாக என்ன செய்ய முடியும்.

நம்மளால் ,நமக்காக உழைக்க தேர்தேடுக்க பட்டவர்களால் நாமே வஞ்சிகபட்டோம்.

இது தான் இந்திய ஜனாதிபத்தியம்.

Tuesday, July 6, 2010

இவர்கள் எப்போது திருந்துவார்கள்

'குமரி மாவட்டத்தில் ஒன்பது அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்க பட்டன '
இது இன்றைய சேதி .

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக எதிர் கட்சிகள் அறிவித்த முழு அடைப்பின் போது குமரி மாவட்டத்தில் நேர்ந்தது இது .
படித்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்று பெயர் ,ஆனால் செய்வது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் . பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்த பேருந்துகள் என்ன பாவம் செய்தது .
இந்த பேருந்துகளின் கண்ணாடியை யார் வந்து சரி பார்ப்பார்கள் , அப்படி சரி பார்த்தாலும் யார் வீட்டு பணத்தில் சரி பார்ப்பார்கள் . எல்லாம் நம் பணம் என்று இவர்கள் உணர்வார்களா , இவர்கள் இந்த அரசியல்வாதிகளின் சொந்த வாகனத்தை உடைத்தால் சரி எனலாம். அதை செய்யாமல் நம் வாகனத்தை உடைத்து ,நம் பணத்தை நஷ்டமாக்கி உள்ளார்கள் . எதை செய்தவர்கள் உணர்வார்களா ?.
பொது சொத்துகள் அனைத்தும் நம் வரி பணத்தில் வாங்கியவை ,நம் வரி பணத்தில் நிருவகிப்பவை என்பதை அறிவார்களா இவர்கள்.
எங்கே உணர போகிறார்கள் நம் பணத்தையே பயன்படுத்தி பொருட்கள் வாங்கி நமக்கே "இலவசம் " என்று தருவதையே உணராதவர்கள் ,எங்கே இதை உணர போகிறார்கள் .
என்னால் அதிகம் படித்தவர்கள் என கூறிகொள்ளும் குமரி மக்களே இதை உணராத போது ,மற்றவர்களை என்ன சொல்ல? .

Thursday, July 1, 2010

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் வெ . இறைஅன்பு அவர்கள் எழுதிய வேடிக்கை மனிதர்கள் புத்தகம் வாசிக்க நேர்ந்தது . மிகவும் சுவையாக ரசிக்கும் படி உள்ளது . அதில் நான் மிகவும் ரசித்தது ' நடையா ...... இது நடையா ? '. அந்த பாகத்தில் சில துளிகள், இந்த என் முதல் பதிவில் .

'ஒரு கும்பல் தினமும் காலையில் சாலையை அடைத்து கொண்டு நடப்பதையும் , எங்கு புரோட்டா குருமா சுவையாக இருக்கும் என்று உப்பு கார சுவை பற்றி உரக்க பேசி வருவதை காணலாம் . அவர்கள் பேசுகிற பேச்சில் உடம்பில் வியர்வை வருகிறதோ இல்லையோ நாக்கில் எச்சில் ஊறுவதை காணலாம் .'

' என் நண்பர் ஒருவர் சரியான கருமி ,"வாக்கிங் போக ஆரம்பித்த உடன் இளைக்க ஆரம்பித்து விட்டது "என்றார் ."பார்த்தால் தெரியவில்லை , என்றேன் .,'பார்த்தால் தெரியவில்லை " என்றேன் ."நான் சொன்னது பர்சை ......ஷூ , ட்ஷிர்ட் ,எல்லாம் வாங்கி பர்ஸ் காலி " பர்ஸ் இளைத்த வருத்தத்தில் அவரும் சீக்கிரம் இளைத்து போனார் .'

இப்படியாக வெவ்வேறு மனித குணநலன்களை பற்றி சுவையாக எழுதியுள்ளார் .

நல்ல புத்தகம் ,வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படியுங்கள்.