Search This Blog

Friday, October 8, 2010

நாடகமே உலகம் (1)

எங்கள் நிறுவனத்தில் ஒரு தொழிலாளர் விடுமுறைக்கு செல்ல அவர் நடத்திய நாடகங்களே இந்த பதிவு .

இந்த நாடகத்தின் கதாநாயகனின் பெயர் ராமர் . எங்கள் நிறுவனத்தில் தொழிளார்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மாதம் விடுமுறை கொடுப்பது விதிமுறையாக உள்ளது. இரண்டு வருடத்திற்கு விமான டிக்கெட் இரு வழிக்கும் கொடுப்பது உண்டு. நம் நாயகன் விடுமுறைக்கு சென்று திரும்பி வந்து ஒரு வருடம் ஆனவுடன் மீண்டும் விடுமுறை கேட்டார் , நான் அது இப்போ அனுமதிக்க முடியாது என்று கூறினேன் . 
ஒரு மூன்று மாதம் சென்றதும் நான் அவரிடம் ஊருக்கு போகணும் என்று சொன்னிங்க இல்லையா  இப்போ போய்கிட்டு வரீங்களா என்று கேட்டேன் . அவர் சொன்னார் நிறைய கடன் இருக்கிறது இப்போ போகவில்லை என்றார். இப்போ சென்றால் ஒரு வழி டிக்கெட் எடுக்கணும் திரும்பவும் கடன் கூடும் என்றார். 
அடுத்த நாள் காலையில் ஏன் கைபேசியில் அழைத்தார் அவர் சித்தப்பா உடம்புக்கு முடியாமல் ரெம்ப சீரியசாக உள்ளதாக கூறி உடனே செல்ல வேண்டும் என்று கூறினார்.நான் பாக்கலாம் என்று கூறினேன் .ஒரு இரண்டு மணி நேரம் சென்றதும் மீண்டும் அழைத்தார் சித்தப்பா இறந்து விட்டார் ,நான் சென்றாலே அடக்கம் செய்வார்கள் உடனே செல்ல வேண்டும் என்றார் ,எனக்கு ஒரு சந்தேகம்.முன்பு விடுமுறைக்கு செல்லும் போது ஊரில் உள்ள தொலைபேசி எண் கொடுத்திருந்தார் .அந்த எண்ணிற்கு அழைத்தேன் ,அவர் இல்லாள் போன் எடுத்தார் ,அவரிடம் ஊரில் எதாவது பிரச்சனை உள்ளதா என்று கேட்டேன் அவர் ஒன்றுமில்லை என்றார் .
நம் நாயகன் இப்போ கைபேசியில் திரும்பவும் அழைத்தார் ,நான் எடுக்க வில்லை ,அவர் திரும்பி அழைக்கவும் இல்லை.அடுத்த நாள் பணிக்கு வரும் போது கேட்டேன் ,அடக்கம் முடிந்து விட்டதா என்று .அவர் சிரித்து விட்டு சென்று விட்டார் . 

அடுத்த காட்சி அடுத்த பதிவில்   .

10 comments:

எஸ்.கே said...

நல்லாயிருக்குங்க!

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html

அஹமது இர்ஷாத் said...

நாடகமே உலகம்//

Kandippaa..

hubert said...

Dear senthil,
Its nice to see ur blog. THe writing is good, but concentrate more on social issues rather than on chicken uppumaas!!! Congrats for ur efforts.

பார்வையாளன் said...

”but concentrate more on social issues rather than on chicken uppumaas!”

அன்புள்ள செந்தில்,

சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் சொல்ல ஆயிரம்பேர் உண்டு..

என் ரேஞ்சுக்கு எழுத சிலரே உண்டு..
அந்த சிலரில் நீங்களும் ஒருவர்..
இப்போதைய பாணியையே தொடரவும்

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா நல்லா இருக்கு மக்கா....

ஞாஞளஙலாழன் said...

அருமை. அடுத்த காட்சிக்கு காத்திருக்கிறோம். சீக்கிரம் திரையை விலக்குங்கள்.

Jey said...

செந்தில், சூப்பெர், அடுத்த காட்சியயும் எழுதுங்க...., வாழ்க்கைல இதெல்லாம் சகசமப்பா...:)

Prakash P.N said...

உங்கள் சைட் சூப்பர் யா ....
பெஸ்ட் ஒப் லக்
கீப் கோயன்.....

எனது சைட்

http://eyepicx.blogspot.com

Prakash P.N said...

உங்கள் சைட் சூப்பர் யா ....
பெஸ்ட் ஒப் லக்
கீப் கோயன்.....

எனது சைட்

http://eyepicx.blogspot.com