Search This Blog

Friday, October 8, 2010

நாடகமே உலகம் (1)

எங்கள் நிறுவனத்தில் ஒரு தொழிலாளர் விடுமுறைக்கு செல்ல அவர் நடத்திய நாடகங்களே இந்த பதிவு .

இந்த நாடகத்தின் கதாநாயகனின் பெயர் ராமர் . எங்கள் நிறுவனத்தில் தொழிளார்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மாதம் விடுமுறை கொடுப்பது விதிமுறையாக உள்ளது. இரண்டு வருடத்திற்கு விமான டிக்கெட் இரு வழிக்கும் கொடுப்பது உண்டு. நம் நாயகன் விடுமுறைக்கு சென்று திரும்பி வந்து ஒரு வருடம் ஆனவுடன் மீண்டும் விடுமுறை கேட்டார் , நான் அது இப்போ அனுமதிக்க முடியாது என்று கூறினேன் . 
ஒரு மூன்று மாதம் சென்றதும் நான் அவரிடம் ஊருக்கு போகணும் என்று சொன்னிங்க இல்லையா  இப்போ போய்கிட்டு வரீங்களா என்று கேட்டேன் . அவர் சொன்னார் நிறைய கடன் இருக்கிறது இப்போ போகவில்லை என்றார். இப்போ சென்றால் ஒரு வழி டிக்கெட் எடுக்கணும் திரும்பவும் கடன் கூடும் என்றார். 
அடுத்த நாள் காலையில் ஏன் கைபேசியில் அழைத்தார் அவர் சித்தப்பா உடம்புக்கு முடியாமல் ரெம்ப சீரியசாக உள்ளதாக கூறி உடனே செல்ல வேண்டும் என்று கூறினார்.நான் பாக்கலாம் என்று கூறினேன் .ஒரு இரண்டு மணி நேரம் சென்றதும் மீண்டும் அழைத்தார் சித்தப்பா இறந்து விட்டார் ,நான் சென்றாலே அடக்கம் செய்வார்கள் உடனே செல்ல வேண்டும் என்றார் ,எனக்கு ஒரு சந்தேகம்.முன்பு விடுமுறைக்கு செல்லும் போது ஊரில் உள்ள தொலைபேசி எண் கொடுத்திருந்தார் .அந்த எண்ணிற்கு அழைத்தேன் ,அவர் இல்லாள் போன் எடுத்தார் ,அவரிடம் ஊரில் எதாவது பிரச்சனை உள்ளதா என்று கேட்டேன் அவர் ஒன்றுமில்லை என்றார் .
நம் நாயகன் இப்போ கைபேசியில் திரும்பவும் அழைத்தார் ,நான் எடுக்க வில்லை ,அவர் திரும்பி அழைக்கவும் இல்லை.அடுத்த நாள் பணிக்கு வரும் போது கேட்டேன் ,அடக்கம் முடிந்து விட்டதா என்று .அவர் சிரித்து விட்டு சென்று விட்டார் . 

அடுத்த காட்சி அடுத்த பதிவில்   .