இன்று பணி முடிந்து வீட்டிற்கு taxi யில் திரும்பி கொண்டுயிருந்தேன் ,எப்படியும் டாக்ஸி குறைந்தது அறுபது கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது .அமீரகத்தில் உள்ள சாலைகளை பற்றி பதிவர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன் .திடீரென நடு ரோட்டில் பிரேக் இட்டு நிறுத்தி வண்டியை விட்டு இறங்கி ஓடினார் .என்னடா என்று பார்த்தால் ரோட்டில் ஒரு சிறு பையன் குறுக்காக ஓடுகிறான் ,இரண்டு வயது இருக்கும் .எதை பத்தியும் கவலை படவில்லை அவன் .சாலை என்றால் சிறிய சாலை இல்லை ,மொத்தம் நான்கு வழி சாலை .நான் வந்த டாக்ஸி டிரைவர் அப்புறத்து எதிர் திசையில் வந்த வண்டிகளை கை கட்டி நிறுத்தினார் ,இல்லை என்றால் ஒரு விபத்து உறுதியாக நடந்திருக்கும்.
சம்பவம் என்னவென்றால் அப்பையனின் தகப்பன் சாலையின் ஒரு கரையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் வண்டியில் பையனை வைத்து விட்டு ,மறு கரையில் உள்ள கடையில் சமான் வாங்க சாலையை கடந்து சென்று உள்ளார் .அதை பார்த்த சிறுவன் கதவை திறந்து கடகட வன சாலையை கடந்துள்ளான்.
தவறை அவர் மீது வைத்து விட்டு ,அவர் அந்த சிறுவனை சாத்தினார்,என்ன மனிதர் அவர் .
எனவே பதிவர்களே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் கவனம் தேவை. வாகனத்தில் விட்டு சென்றால் மறக்காமல் லாக் செய்து செல்லவும் .எப்போதும் child lock setup செய்து வைக்கவும் .
.
Thursday, August 19, 2010
குழந்தைகள் இருப்பவர்கள் கவனிக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
செந்தில், நல்ல கருத்துல்ல இடுகை... நான் என் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது, கவனத்துடன் இருக்கிறேன்..எல்லோரும் இப்படி இருந்தால் நல்லது...அவர்களுக்கு அபாயம் தெரியாது...
கண்டிப்பாக பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ..
Post a Comment