இரண்டு தினமாக நிறுவனத்தில் வாங்கி கட்டி கொள்ள வேண்டியதாக போச்சு .
இந்த 'பொலிடிக்ஸ் ' செய்கிற ஆட்களால் மன நிம்மதியே போச்சு . மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் துவண்டு போய் நேற்று மாலை உண்ணவும் இல்லை , இரவு இரண்டு மணி வரை உறங்கவும் இல்லை .பின் எப்படியோ உறங்கி போனேன் . தூக்கத்தில் ஒரு கனவு ,முழு சாரமும் நினைவில் இல்லை இருந்தாலும் விழிப்பு வந்தவுடன் ஒரேஒரு வாக்கியம் மாத்திரம் நினைவு 'இரண்டு தினத்தில் பரீட்சை ரிசல்ட் ஏன் பயப்படவேண்டும் '. சரி ஒரு கலக்கத்தில் இன்று ஆபீஸ் போயாச்சு .திரும்பவும் அதே பிரச்சனை .நிம்மதி இன்றி மதியம் ஆபீஸ் செல்ல வில்லை. ரூமில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு ஒரு சிறிய உறக்கம் , திரும்பவும் கனவு ,இப்போது ஒரு குழந்தை பிறப்பும், நான் தங்கி இருக்கும் அஜ்மானில் ஒரு கொடுன்மழையும் சுறாவளி காற்றும்.முழிப்பு வந்ததும் அந்த கனவும் ஏதோ சொல்ல வருவது போல் தோணியது (தோன்றியது) .உலகில் இப்படி பல பேரிடர்கள் இருக்கும் போது , வாழ்கையில் இந்த சிறிய கஷ்டத்தை நேரிடராவிடில் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்வது போல் இருந்தது.
உடனே எல்லாம் சரியாகும் என்ற எண்ணத்தோடு ,இதை ஒரு பதியமாக போட்டு விடலாம் என்று உடனே எழுதி விட்டேன் .
Sunday, July 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விடுங்க சார், வீட்டுக்கு கால் பண்ணுங்க, ஃபிரண்ஸுக்கு கால் பண்ணி பேசுங்க , மனசு கொஞ்சம் லேசாகி தெளிவு வந்துரும், அப்புரம் இந்த மாதிரி கனவெல்லாம் வராது:)
Post a Comment