Search This Blog

Monday, September 6, 2010

ஒன்னுமே புரியல ....... இந்த பாரதத்திலே





ஏழைமக்களுக்கு இலவசமாக தானியங்களை கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை நடைமுறைப்படுத்த முடியாது. நாட்டில் 37 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்குவது என்பது முடியாத காரியம். அரசின் கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட் தலையிடக்கூடாது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு ‌கொடுத்து விட வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(அய்யா, மன்மோகன் சிங் அவர்களே, சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லுதுன்னா , அதிகமா வீணாக போகும் உணவு பொருளை ஏழை மக்களுக்கு இலவசமா கொடுங்க அப்படினுதான் ,,37% சதவீத மக்கள் எல்லோருக்கும் கொடுக்க சொல்லவில்லை. எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு கொடுங்க போதும் . நீங்க என்ன அதிரடியா பேட்டி எல்லாம் கொடுக்க வேணாம்,).





தொழிற்கூடங்கள் சுற்றுசூழலுக்கு கெடுதல் இல்லாத அளவில் அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் வறுமைகள் ஒழிக்கப்படுவது மூலம் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்று சொல்ல முடியாது.
இவ்வாறு பிரதமர் கூறினார்.

(இதன் மூலம் என்ன சொல்ல வராருன்னு  புரியல , தொழில் கூடங்கள் அமைக்க படுமுனு சொல்ரார  இல்ல அமைக்க படாதுன்னு சொல்ல வர்றார  !!! ஒன்னுமே புரியல..)


ஒன்னுமே புரியல ....... இந்த பாரதத்திலே ............


கேள்வி 1. 
37 %  வறுமை கோட்டுக்கு கீழ் என்றால்  , அரசு அவர்களை முன்னேற்ற என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறது. 


கேள்வி 2   .
இத்தனை மக்கள் பட்டினியில் உள்ள போது  இவர்களுக்கு சேவை செய்யும் நாடாளுமன்ற உறுபினர்களுக்கு இப்போது எதற்கு சம்பள உயர்வு,.



3 comments:

kavisiva said...

நீங்க வேற கார்முகிலன். அமைச்சர்களுக்கு ஈகோ பிரச்சினை. தானியங்கள் மண்ணோடு மக்கிப் போனாலும் சரி கோர்ட் சொல்றதுனால நாங்க ஏழைகளுக்கு கொடுக்கமாட்டோம்னு சொல்றாரு உணவு அமைச்சர் (அவர் சொன்னதுக்கு இதுதானே அர்த்தம்)
என்னா மனித நேயம். அமைச்சரா இருப்பதற்கு தகுதியானவரைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்காங்க. அனுபவிப்போம் :(.

Anonymous said...

கார்முகிலன் சார் செம்ம கேள்வி கேட்டிடிங்க ..இதுல வேறே இந்தியா ஒளிர்கிறதாமே..அரசியல் வாதிகள்கு தான் இதெல்லாம் பொருந்தும் சரி தானே ..பகிர்வுக்கு நன்றி

senthil velayuthan said...

enna kelvi kettu enna payan.

ellam naam anupavika vaendiyathu than.