நான் இதை செய்ய வேண்டி வந்த சந்தர்பமும் வித்தியாசமானது.
நேற்று மாலை நேர உணவிற்காக இஞ்சி சிக்கன் ட்ரை செய்தேன் .
மணம் ,நிறம் எல்லாம் நன்றாக இருந்தது . நானும் என் சக நண்பரும் சாப்பிட இருந்தோம்.
வாயில் வைத்த போது சாப்பிட முடிய வில்லை. உப்பு அதிகம் ஆயுடுச்சு .
என்ன செய்ய ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு ,மீதமானதை நாளை எதாவது செய்யலாம் என்று வைத்து விட்டோம்.
காலை எழுந்து குளித்து விட்டு டிபன் செய்ய யோசித்தேன் .
சிக்கனை எதாவது செய்ய எண்ணினேன் .அப்போது கண்ணில் பட்டது ரவை.
சரி இந்த ரெண்டையும் சேர்த்து கலக்கினால் என்ன என்று தோன்றியது.
உடனே செயலில் இறங்கினேன் .
அந்த மீதமான சிக்கனில் ரெண்டு தம்ளர் வெள்ளம் சேர்த்தேன் .
ஒரு வெங்காயம் நறுக்கி சேர்த்து கொதிக்க வைத்தேன் .
நன்றாக கொதித்ததும் அதில் ரவை சேர்த்து நன்றாக கிளறி ,கறிவேப்பிலை சேர்த்து இறக்கினேன் .
சுவையான ' சிக்கன் உப்புமா' ரெடி.
ரெம்ப நன்றாக இருந்தது.
3 comments:
சொல்லி இருந்தா வந்து இருப்போம்ல... படிக்குபோதே எச்சில் ஊறுது
ok appo nalabaagam irukkunno sollungo
ஆகா..விட்டால் ஒரு சமையல் புத்தகம் ரெடி பண்ணிடுவீங்க போலிருக்கே..
"ரெண்டு டம்ளர் வெள்ளம் சேர்த்து" !!!!!!! பார்டரோ?!!!!
Post a Comment