நாளை என் இருபத்தி எட்டு வயது நிறைவடைந்து இருபத்தி ஒன்பதாம் அகவையில் காலடி வைக்கின்றேன்.இது வரை கடந்து வந்த பதையை வலைபதிவில் பதிக்கலாம் என்று ஒரு அவா. நாளை என் வரலாற்றை தேடி யாரும் சிரம படகூடாது என்று ,என் நினைவுகளை ஒரு தொடராக பதிவுலகில் பதிக்கின்றேன்.யார் அறிவார் நானும் நாளை ஒரு பிரபலம் ஆகலாம்.
இதில் என் நினைவில் உள்ள சுக துக்க சம்பவங்களும், எங்கள் ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டம் முழுவதும் காலபோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பதிவு செய்யவுள்ளேன்.இது என்பதுகளில் இருந்து தொடங்கும்.முதல் அத்தியாயமாக என் நினைவில் உள்ள எங்கள் பழைய வீடு .
அத்தியாயம் - 1
எங்கள் வீடு என்பதுகளில்.
எங்கள் வீடு கிழக்கு திசை நோக்கியது. எங்கள் வீடு இருபது அடி உயரம் கொண்ட ஓட்டு கூரை கொண்ட வீடு. எங்கள் வீடு இரண்டு முறிகள் கொண்டது,அதாவது இரண்டு வீடுகள் சேர்ந்து ஒன்றானது.முன்புறம் இரண்டு படிகட்டுகள் நேராக முறிகளின் கதவிற்கு நேராக இருக்கும்.இடபுற படிகட்டில் ஏறிய உடன் இடது ஓரமாக ஒரு சிறிய அறை, வலதுபுறம் திண்ணை. வலபுற படிகட்டில் ஏறிய உடன் வலது ஓரமாக ஒரு சிறிய அறை. இவை இரண்டையும் இணைத்த மாதிரி நீண்ட திண்ணை,அதன் நடுவில் வகிடெடுத்த மாதிரி ஒரு சுவர்,அதன் நடுவில் ஒரு வாசலும் உண்டு.இரண்டு திண்ணையிலும் தலா ஒரு பெஞ்சும் ஒரு நாற்காலியும் போடபட்டிருக்கும். இனி முறிகளை பற்றி பார்ப்போம்.வாசல் கதவை திறந்தவுடன் 'மங்களாவு' இங்கு தான் உறங்குமிடம். இதன் இடபுறம் 'அரங்கு' இது பூசை அறை மற்றும் பெட்டக அறை எனலாம். மங்களாவில் இருந்து நேராக அடுத்து 'அடுக்களை' அதன் இடபுறம் தானிய வகை வைக்கும் அறை.அடுக்களையின் நேராக பின்பக்க வாசல்.இதன் பிம்பமாக அடுத்த முறி இருக்கும்.வீட்டின் பின்புறம் ஓலையால் வேயபட்ட வெளிபுற அடுக்களை உண்டு.வீட்டின் வலது ஓரம் பெரிய மாட்டு தொழுவமும் அதன் முன்புறம் பெரிய வைக்கோல் படப்பும் உண்டு.வைக்கோல் படப்பிலிருந்து வீட்டின் இடது ஓரம் வரை விரிந்த பெரிய முற்றம்.வீட்டின் முன்புறம் சரியாக நடுவில் ஒரு முல்லை செடி ஓங்கி ஓட்டின் மீது படர்ந்து கிடக்கும்.
எங்கள் வீட்டு தோப்பு பற்றி அடுத்த பதிவில்.
2 comments:
//வீட்டின் முன்புறம் சரியாக நடுவில் ஒரு முல்லை செடி ஓங்கி ஓட்டின் மீது படர்ந்து கிடக்கும்.//
எங்கள் ஊரிலும் சில வீடுகளில் இப்பிடி முல்லை செடிகளை படர விட்டுருக்காங்க...
இன்ட்லி'யில் தமிழ் மணத்தில் இணையுங்கள் மக்கா....
Post a Comment