மீன் குழம்பு
இது நான் நேற்று இரவு செய்து பார்த்தது , நன்றாக இருந்ததால் பதிவு இடுகிறேன் .
எல்லோரும் செய்து பாருங்கள்.
சேர்வைகள்
அ. தக்காளி - 2 (நடுத்தரம் )
ஆ. வெங்காயம் - 2 (பெரிது)
இ. பூண்டு - 4 விழுது
ஈ . இஞ்சி - ஒரு சிறிய துண்டு .
உ. பச்சை மிளகாய் - 4
ஊ. மல்லி பொடி - 2 மேஜை கரண்டி
எ. மிளகாய் பொடி - 3 மேஜை கரண்டி
ஏ. மஞ்சள் பொடி - ௧ மேஜை கரண்டி
ஐ . பெருங்காய தூள் .
ஒ . எண்ணெய் ,உப்பு,கறிவேப்பிலை,புளி - தேவையான அளவு .
மீன் அரை கிலோ எடுத்துகோங்க - சுறா மீன் துண்டுகளாக இருந்தால் நல்லது,அல்லது எதாவது பெரிய மீன் துண்டுகளாக இருந்தாலும் சரி .
செய்முறை.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி,தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டங்களாக வெட்டி கொள்ளவும்.
புளியை நீர் விட்டு கரைத்து கொள்ளவும் .
சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதங்கியதும் , வெங்காயம் சேர்க்கவும் .
வெங்காயம் கண்ணாடி மாதிரி ஆனதும் தக்காளி சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும்.
தக்காளி மசியும் அழவு வெந்ததும் ,நன்றாக கிளறி அதில் எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறவும் .
எண்ணெய் தனியாக பிரியும் போது ,மீன் துண்டங்களை போடவும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள புளி நீரையும் சேர்த்து ,கொதித்ததும் இறக்கி விடவும்.
பின்னர் கறிவேப்பிலையை சேர்த்து மூடி வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.
Thursday, September 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எதா வெஜ்,.ரெசிபி போட்டா செஞ்சு பார்க்கறேன் ..நள பாசகம் நல்லா இருக்குமே அதான்
சிவப்பாக குழம்பு அருமையாக இருக்கு.காரம் எப்படி?
karam konjam jasthiya irukum
veg. recipe try panrathu kammi.
ethavthu try panni nalla vantha pathivu poduren
மீன் குழம்பு என்றாலே அம்மா தான் நினைவுக்கு வருவார்கள்... இப்போதும் ஊருக்கு சென்றால் அன்றைய ஸ்பெஷல் மீன் குழம்பாக தான் இருக்கும்..(நானும் குமரி தான்..மார்த்தாண்டம்)
அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
வெறும்பய said...
மீன் குழம்பு என்றாலே அம்மா தான் நினைவுக்கு வருவார்கள்... இப்போதும் ஊருக்கு சென்றால் அன்றைய ஸ்பெஷல் மீன் குழம்பாக தான் இருக்கும்..(நானும் குமரி தான்..மார்த்தாண்டம்)
varukaikum , karuthukum nantri
எல்லாம் சரி.....இந்த பதிவை ஏன் நகைச்சுவை பிரிவில் சேர்த்தீர்கள். மீன்குழம்பை சாப்பிடும்போது சிரிக்க வேண்டுமோ..?
Post a Comment