Search This Blog

Monday, July 26, 2010

தொலைந்த முகங்கள்

இந்த அரபு நாட்டுக்கு வந்த பிறகு நிறைய மனிதர்கள் வாழ்கையில் மின்னல் மாதிரி வந்து மறையாத நினைவுகளை தந்து மின்னல் மாதிரி மறைத்து போனவர்கள் ஏராளம் .அவர்களை பத்தி ஒரு நினைவு கூறல் .
முதலில் 'கணபதி 'யை பத்தி சொல்லியாகனும்,ஒரு தஞ்சைகாரன் . அரபு நாட்டு கம்பெனி எப்படி இருக்கும் என்று தெரியாமல் ஒரு எதிர்பார்போடு கம்பனியில் காலடி எடுத்து வைத்தால் ,'தமிழா ' என கேட்டு ஒரு குரல் .அது தான் கணபதி .ஏய் ஒரு தமிழ் ஆள் ,ரெம்ப சந்தோசம் அவனுக்கு இரண்டு வருசமா தமிழ் ஆளுங்க இல்லாத கம்பனியில் ஒருத்தனை பார்த்ததும் .பின்னர் நாங்கள் ரெம்ப நெருக்கம் ஆகிற்றோம் . பின் அவன் ஒரு எதிர்பாரத விபத்தால் திரும்ப அரபு நாடு வர முடியாமல் ஆகிற்று.
அடுத்து 'ஷஹாப் அஹ்மத் ' என்று ஒரு பாகிஸ்தானி மெக்கனிக்கல் எஞ்சினியர் . ஆளை கண்டால் ஒரு 'சுமோ' வீரரை போல் இருப்பர் . அறுபது வயதானவர் ,ஆனால் ரெம்ப அக்டிவ் . அரபு நாட்டில் நாற்பது வருடமாக இருப்பவர் .அவரும் ஒரு விபத்தில் சிக்கி கை கால் செயல்படாமல் நாடு திரும்பி விட்டார்.
அடுத்து 'காசிம் ' இவறும் ஒரு பாகிஸ்தானி .நல்ல வாகன ஓட்டுனர் ,ஆனால் இவறும் ஒரு சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார் .
அடுத்து 'ஹம் பகதூர் ' ஒரு நேபாளி .கம்பெனி ஆபீஸ் பாய் .அவன் நாட்டுக்கு சென்றவன் திரும்ப வரவில்லை.
அடுத்து எங்கள் ரூமில் தங்கியிருந்த 'மோகன்தாஸ் ' ,ஒரு கப்பல் கப்டன் ,இவறும் ஒரு வழக்கில் சிக்கியதால் திரும்ப வர முடியவில்லை .
அடுத்து 'ஹபிப் ரஹ்மான் 'ஒரு பாகிஸ்தானி வாகன ஒட்டி ,இவரை பற்றியும் நிறைய சொல்லலாம் . ஹிந்தி என்னவென்று தெரியாமல் இருந்த என்னை ,ஓரளவு தத்தி பித்தி பேச வைத்தவன் .அவனும் இப்போ எங்கே என தெரியவில்லை .
பின்னர் 'ராஜன் ,அர்ஜுன்,சுரேஷ் ,சுகதன் ,சந்தோஷ் மற்றும் நிறைய பலர்.
நான் இப்போ ஒன்றை பற்றி மட்டும் நினைக்கிறன் , எங்கோ பிறந்து ,எங்கோ வளர்ந்து ,ஒன்றாக வெவேறு களத்தில் பணிபுரித்து ,நம் மனதில் மட்டும் மறையாமல் செய்தது எது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.யாராவது புரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் .

4 comments:

செல்வா said...

நல்லா இருக்கு .. follower widget வையுங்க ..!! உங்களை எப்படி follow பண்ணுறது...!!

Anonymous said...

"நம் மனதில் மட்டும் மறையாமல் செய்தது எது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.யாராவது புரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்"

உண்மையான அன்பு அதுதான் அவங்களெல்லாம் நம் மனதில் இருந்து மறையாமல் செய்யறது ...உங்க பதிவு நல்லா இருந்தது ..

இதேபோல் உங்க நண்பர்களும் உங்களை நினைச்சிட்டு தான் இருப்பாங்க

Anonymous said...
This comment has been removed by the author.
Deekshanya said...

nalla post, ipdi namma manasila aalama kaal pathichitu thidirnu kanamal pona manushangala nyabaga paduthikarathu.nalla eluthi irukinga.

Cheers,
Deeksh