Search This Blog

Tuesday, July 6, 2010

இவர்கள் எப்போது திருந்துவார்கள்

'குமரி மாவட்டத்தில் ஒன்பது அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்க பட்டன '
இது இன்றைய சேதி .

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக எதிர் கட்சிகள் அறிவித்த முழு அடைப்பின் போது குமரி மாவட்டத்தில் நேர்ந்தது இது .
படித்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்று பெயர் ,ஆனால் செய்வது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் . பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்த பேருந்துகள் என்ன பாவம் செய்தது .
இந்த பேருந்துகளின் கண்ணாடியை யார் வந்து சரி பார்ப்பார்கள் , அப்படி சரி பார்த்தாலும் யார் வீட்டு பணத்தில் சரி பார்ப்பார்கள் . எல்லாம் நம் பணம் என்று இவர்கள் உணர்வார்களா , இவர்கள் இந்த அரசியல்வாதிகளின் சொந்த வாகனத்தை உடைத்தால் சரி எனலாம். அதை செய்யாமல் நம் வாகனத்தை உடைத்து ,நம் பணத்தை நஷ்டமாக்கி உள்ளார்கள் . எதை செய்தவர்கள் உணர்வார்களா ?.
பொது சொத்துகள் அனைத்தும் நம் வரி பணத்தில் வாங்கியவை ,நம் வரி பணத்தில் நிருவகிப்பவை என்பதை அறிவார்களா இவர்கள்.
எங்கே உணர போகிறார்கள் நம் பணத்தையே பயன்படுத்தி பொருட்கள் வாங்கி நமக்கே "இலவசம் " என்று தருவதையே உணராதவர்கள் ,எங்கே இதை உணர போகிறார்கள் .
என்னால் அதிகம் படித்தவர்கள் என கூறிகொள்ளும் குமரி மக்களே இதை உணராத போது ,மற்றவர்களை என்ன சொல்ல? .

2 comments:

Jey said...

சார், படிப்புக்கும் பண்பாடுக்கும் பல விசயங்கள்ல சம்பந்தமே இல்லாமதான் இருக்கு. இன்கே எல்லா அமைப்புகளும் ஊனமாத்தான் சார் இருக்கு.
புதுசா பதிவு போடரீங்களா சார், நான் கூட போன மாசத்திலிருந்துதான், எழுத ஆரம்பிச்சேன். வாழ்த்துக்கள்.

senthil velayuthan said...

thanks jey.i am also new to blog.