Search This Blog

Tuesday, March 29, 2011

வில்லனுக்கு ஓட்டு போடுங்க




தமிழக மக்களே இது உங்கள் அரசு.அரசு என்பது நாம் தான்.நாம் நம் குடும்பத்தை நிறுவகிப்பதை போல் அதை நிறுவகிக்க வேண்டும்.இங்கு உள்ள முதலீடு அனைத்தும் நம் பணம்.எனவே நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து நம் முதலீடுகளை காப்பாற்றிக் கொள்வோம்.நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் இலவசமாக தருவேன் என்பது அனைத்தும் நம் பணமே.நாம் வரியாக செலுத்தும் பணம்,முறையாக நம் முன்னேற்றத்திற்கு பயன்பட இலவசம் அனைத்தையும் உதரி தள்ளுங்கள்.உலகில் யாரும் யாருக்காகவும் இலவசமாக எதுவும் கொடுக்க மாட்டார்கள்.உலகில் எந்த பொருளும் இலவசமாக கிடைக்கவும் செய்யாது.ஆகவே மக்களே உணருங்கள்.உணர்ந்து செயல்படுங்கள்.இலவசம் என்று கூப்பாடு போடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

மக்களே சிந்தனை செய்துப் பாருங்கள் ,இந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை கீழ் உள்ளவாறு இருந்திருந்தால்.........

இதோ தமிழ் மக்களுக்காக என் 'வில்லன்' தேர்தல் அறிக்கை.


1. கல்வித் துறை மேம்படுத்தப்படும்.
  1. தற்போது நிலுவையிலுள்ள அனைத்து இலவச பஸ் பாஸ்கள் ரத்து செய்யபடும்.
  2. மக்கள்தொகைக்கேற்ற படி 5-6 ஊர்களுக்கு மத்தியில் அரசு பள்ளிகள் அமைக்கப்படும்.
  3. ஊருக்கு அருகாமையிலுள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு அப்பள்ளிகளுக்கு செல்வதற்கு மட்டும் பஸ் பாஸ் வழங்கப்படும்.
  4. பள்ளிகளில்  ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வியும் அரசியல் மற்றும் சட்டக்கல்வியும் பயிற்றுவிக்கப்படும்.
  5. மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்ய பயிற்றுவிக்கபடும்.
  6. பள்ளிகளில் மாணவர்களால் செய்யபட்ட கைவினை பொருட்கள் கொள்முதல் செய்யபட்டு விற்பனை நிலையமும் அமைக்கப்படும்.
  7. எல்லா பள்ளிகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப படும்.
  8. எல்லா கல்லூரிகளும் படிப்படியாக அரசுடமையாக்கப்படும்.
  9. எல்லா இட ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்படும்.
  10. உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
2. விவசாய துறை மேம்படுத்தப்படும்.
  1. எல்லா பாசனக்கால்வாய்களும் தூர்வாரப்பட்டு சீரமைக்கபடும்.
  2. பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றியமைக்க அனுமதிக்கபடாது.
  3. குளங்களும் ஏரிகளும் தூர்வாரப் படும்.
  4. பயிரிடப்படும் விவசாய பயிர்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும்.
  5. பதிவு செயியப்பட்ட பயிர்கள் அனைத்துக்கும் மானிய சலுகையில் இயற்கை சீற்றங்களுக்கான  காப்பீடு வழங்கப்படும்.
  6. எல்லா விவசாய பயிர்களுக்கும் குறைந்த விலை நிர்ணயிக்கப்படும்.
  7. பாசனப்பகுதியில் நீண்டக்கால பயிர் பயிரிட அரசிடம் முன் அனுமதிப்பெற வேண்டும்.
3. தொழிற்துறை மேம்படுத்தப்படும்.
  1. எல்லா மாவட்டங்களிலும் அதிகமான தரிசு நிலங்கள் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
  2. எல்லா தொழிற்பேட்டைகளிலும் பொதுத்துறை நிறுவங்கள் தொடங்கப்படும்.
  3. உத்தேசிக்கப்படும் பொதுத்துறை நிறுவங்கள்
     1. கட்டுமான நிறுவனம்
     2. கைபேசி தயாரிப்பு நிறுவனம்
     3. சிமண்டு
     4. மிண்ணணு நிறுவனம்.
     5. பி.பி.ஓ
     6. தமிழக அரசு கைபேசி சேவை நிறுவனம்
     7. தயார் ஆடை தயாரிப்பு நிறுவனம்.
     8. மின்சார உற்பத்தி நிறுவனம்
  4. தொழிற்பேட்டைகளில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறுவ தனியாருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
  5. ஒரே கிளையில் இருநூறு பேருக்கு மேல் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.
4. விலைவாசி கட்டுப்படுத்தப்படும்.
  1. எல்லா உணவு பயிர்களுக்கும் குறைந்த விலை நிர்ணயம் செய்தது போல் உயர்ந்த விற்பனை விலையும் நிர்ணயிக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
  2. உள் நாட்டு உபயோகம் போக மீதமுள்ள பொருட்களே வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.
  3. சரக்குந்திற்கான டீசலின் மாநில விற்பனை வரி குறைக்கப்படும்.
5. சாலைப் போக்குவரத்து மேம்படுத்தப்படும்.
  1. மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கம் முன் கண்டு புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அமைக்கப்படும்.
  2. அனைத்து பொக்குவரத்து அலுவலகங்களும் கணிணி மயமாக்கப்படும்.
  3. சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  4. போக்குவரத்து துறையில் புதிய காவலர்கள் பணியமர்த்தப்படுவர்.
  5. எல்லா விபத்துக்களும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
  6. காவலர் விபத்து பதிவு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு விபத்திற்கான இழப்பீடு வழங்கப்படாது, மேலும் வாகன பணி சீரமைப்பு செய்ய         அனுமதிக்கப்படாது.
  7. எல்லா முக்கிய சாலைகளும் நாங்கு வழி சாலையாக மாற்றி அமைக்கப்படும்.
6.  சொகுசு வாகனங்களின் விற்பனை வரி உயர்த்தப்படும்
7.  மிதிவண்டிகான விற்பனை வரி ரத்து செய்யப்படும்.
8.  அரசு பேருந்துகள் சரியாக பராமரிக்கப்பட்டு , மிக சரியான சமய அட்டவணையில் இயக்கபடும்.
9.  தனியாருக்கான எரிப்பொருளின் விற்பனை வரி உயர்த்தப்படும்.
10. ஆட்டோக்கள் அரசுடமையாக்கப்பட்டு,அரசால் நிறுவகிக்கப்படும்.
11. எல்லா துறைகளிலும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, திறமையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
12. எல்லா அரசு அலுவலகங்களும் கணிணி மயமாக்கப்படும்.

4 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒன்றுக்கும் உருப்படாதைஎல்லாம் கதாநாயகன்,நாயகி என்று சொல்லும் போது தொலைநோக்கு சிந்தனையுள்ள உங்களின் அறிக்கையை வில்லன் என்று சொல்லியுள்ளீர்களே....அதுவும் சரிதான்,
கதாநாயகன் நாயகியை காலி பண்ணவந்த வில்லன்...

ஞாஞளஙலாழன் said...

ஆகா ஆச்சரியமா இருக்கு. நானும் வில்லன் தேர்தல் அறிக்கைன்னு சமீபத்துல ஒரு பதிவு போட்டேன் (அதற்கான உங்கள் பின்னூட்டம் பார்த்து இங்க வந்தேன்)....நாம ஒரே மாதிரி யோசிச்சிருக்கோமே!!! நம்பவே முடியல.

மாய உலகம் said...

வில்லன் இங்கே நாயகன்

”தளிர் சுரேஷ்” said...

இதெல்லாம் நடந்தால் நாடு உருப்படும் ஆனா அரசியல் வாதிகள் விடுவார்களா?