Search This Blog

Wednesday, August 18, 2010

என்ன கொடுமை சார் இது

என் நிறுவனத்தில் உள்ள சில சுவையான  கதாபாத்திரங்கள் பற்றி ஒரு தொடர் பதிவு.

அவன் நன்றாக பேசுவான் .உங்களிடம் பேசும் போது ,நிறுவனத்தில் உங்களை விட வேறு நல்லவர்கள் ,வல்லவர்கள் ,மென்மையானவர்கள் கிடையாது என்ற ரீதியில் பேசுவான் .
அவன் பேசுவதில் வீழ்ந்து விட்டால் அவ்வளவுதான் ,தலையில் நன்றாக மிளகாய்  அரைத்து விடுவான் . 

எப்படியாவது எனக்கு ஆயிரம் டிர்ஹம் வேணும் ,கண்டிப்பா அடுத்த மாதம் சம்பளம் கிடைத்தவுடன் தந்து விடுவேன் ,இப்படி கூறி என்னிடம் காசு கேட்டான் ஒருவன் .நானும் பிடி குடுக்காமல் டிமிக்கி குடுத்து வந்தேன் .ஆனால்  அவன் விட வில்லை ,தினமும் அலுவலகம் சென்றவுடன் ,எப்படியாவது இன்று ஏற்பாடு செய்து கொடு என்று ஒரே நச்சரிப்பு . அலுவலகத்தில் எல்லோரும் எதோ நான் அவனுக்கு காசு குடுக்க வேண்டும் என்று எண்ணி விட்டார்கள் .
என்ன செய்ய ஏழரை சனி யாரை விட்டது .அந்த கொடுமை தாங்காமல் அவனுக்கு அருனுறு திர்கம் கொடுத்தேன் ,ஒரு மாதத்தில் திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையோடு . ம்ம் கடந்து விட்டது ஆறு மாதம். காசு திரும்ப வர வில்லை.
எப்போ திரும்ப கேட்டல், அவன் கூறும் காரணங்களை கேட்டால் ,தலை சுத்துகிறது.அவனிடம் காசு திரும்ப கேட்டு நொந்து பொய் விட்டேன் .அவன் திரும்ப தர முடியாததற்கு  சொல்லும் காரணங்கள் 
# சம்பளம் முழுவதும் கிடைக்கவில்லை
(அங்கும் கடன் வாங்கி இருந்த எப்படி கிடைக்கும்).
# மகளுக்கு உடம்பிற்கு முடியவில்லை .
(இது எல்லாம்  ஒரு காரணமா யா )
# ஊர்ல மச்சினிக்கு கல்யாணம் 
(அதுக்கும் இதுக்கும் என்னையா சம்பந்தம் ).
# அண்ணன் இப்போ தான் ஊர்ல இருந்து  வந்தாரு
(யோவ் அதுக்கு நான் என்னையா பண்ண முடியும் ).
# உங்களுக்கு வேண்டி வச்சிருந்தேன் ,இப்போ தான் ஒருத்தன் உடம்புக்கு  முடியலன்னு வாங்கி கிட்டு போனான்
(எனக்கு வச்சிருந்தத நீ எப்படியா அவனுக்கு குடுப்ப ).

இத விட இப்போ ஒரு கொடுமை நடந்தது ,நீ எப்படி கண்ட இடத்தில வச்சி எல்லாம் காசு கேக்குற என்று. ஒரு நாள் ராத்திரி கேட்டா ,நீ ஏன் என் கிட்ட கேக்குற ,நிறுவன கணக்காளர் கிட்ட போய் கேளு அவரு குடுபரு .என்ன கொடுமை சார் இது இவன் கிட்ட காசு குடுத்து கிட்டு ,நான் அவனிடன் கேட்க வேண்டுமாம்   .


இது ஒரு எடுத்து காட்டு தான் .இன்னும் இவனை மாதிரி நான்கு ஐந்து பேர் உள்ளனர் .
அவர்களை பற்றி அடுத்த பதிவு.



7 comments:

Jey said...

///நீ ஏன் என் கிட்ட கேக்குற ,நிறுவன கணக்காளர் கிட்ட போய் கேளு அவரு குடுபரு///

hahahaa. super

கருடன் said...

sari sari feel pannadhinga.... inga oru Aed.800/- thallunga.. naan andha cash vangi tharen....

ஜெட்லி... said...

நிறைய பேரு இந்த மாதிரி இருக்காங்க....
எனக்கு என்னமோ.....
நம்மை அலைய வைக்கறது மூலமா அவங்களுக்கு
ஒரு சந்தோசம் கிடைக்குதுனு நினைக்கிறேன்....
ப்ரீயா விடுங்க....

Niventh said...

ஊருல எவன் கடன் கேட்டாலும் 5 பைசா கொடுக்குறது இல்ல
உஅனக்கு தேவைதான் .... ஹிஹிஹிஹி

Niventh said...

ஊருல எவன் கடன் கேட்டாலும் 5 பைசா கொடுக்குறது இல்ல
உஅனக்கு தேவைதான் .... ஹிஹிஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த மாதிரி நிறைய டிக்கட் இருக்கு .. ஒவ்வொரு கூட்டத்திலும்... எப்படியும் பிப்ரவரி 31 தேதி காசு கொடுத்திருவாரு நீங்க கவலைப் படாதிங்க...

Unknown said...

நான் கூட இப்படி காசு குடுத்துட்டு வாங்க முடியாம போன சம்பவங்கள் உண்டு. எல்லா ஊர்லயும் இப்பிடி ஆட்கள் இருக்குறாங்க போல