அதை விடுங்க இப்போ என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திருமணம் வருகிறது.ஆனால் என்னால் செல்ல முடியும் என்று தோணவில்லை .அதை கூட விடுங்க ,எனக்கு என் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேச கூட நேரம் இல்லை.அதை விட முக்கியம் என் உடன் பிறந்தவர்களை காண கூட நேரம் இல்லை.நான் வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்கு செல்லும் போது அவர்களுக்கு விடுமுறை கிடைப்பதில்லை .
என்ன செய்ய, மனிதன் எத்தனை வேகமாக செல்ல வாகனம் கண்டுபிடித்தாலும் ,எத்தனை வேகமாக ஒரு இடம் விட்டு ஒரு இடம் செல்ல முடித்தாலும் ,எப்ப்போதும் எல்லோரிடமும் கேட்க முடிகின்ற ஒரு வார்த்தை " நேரமில்லை".
அன்று எத்தனை மெதுவாக யாத்திரை செல்ல முடிந்தாலும் எல்லோரிடமும் நல்லது கேட்டதுக்கு சென்று வர நேரமிருந்தது .
இன்று எத்தனை விரைவாக யாத்திரை செல்ல முடித்தாலும் ,எல்லோரும் சொல்வது நல்லது கேட்டதுக்கு செல்ல நேரமில்லை .
என்று இந்த நேரம் எல்லாம் எங்கு சென்றதோ தெரிய வில்லை.
அது மட்டுமில்லை எனக்கு பதிவு வாசிக்கவும் ,பின்னுட்டமிடவும் ஏன் பதிவு எழுதவும் கூட "நேரமில்லை".
4 comments:
///எத்தனை வேகமாக ஒரு இடம் விட்டு ஒரு இடம் செல்ல முடித்தாலும் ,எப்ப்போதும் எல்லோரிடமும் கேட்க முடிகின்ற ஒரு வார்த்தை " நேரமில்லை".///
நேரமெல்லாம் அப்படியேதான் சார் இருக்கு... அதை பணம் சம்பாதிக்க(அதுதான் இப்ப வாழ்க்கையோட முக்கிய நோக்கமாயிருச்சி...அது இல்லைனாலும் வீட்லயே மதிப்பாங்களான்னு சந்தேகம்தான்...) அதை முழுசா செல்லவ்ழிச்சிட்டு இருக்கோம்..., இங்கிருக்கிற சென்னையிலிருந்து ஊருக்கு அடிக்கடி போகமுடியலை...இதுக்கு என்ன சொல்ரீங்க...
100% True.. World is becoming so mechanical!!!
உண்மைதான்! நேரம் அப்படியேதான் இருக்கிறது, ஆனால் அதை யோசித்து, நம் விருப்பப்படி செலவழிக்க இந்த அவசர யுகத்தில் மனம்தான் இருப்பதில்லை!
உண்மைதான் நண்பா...
கடைசி வரிகள் அனுபவம்
Post a Comment