இது ஒரு சிக்கன் கறி. பெயர் என்ன என்று கேக்க கூடாது.அது நீங்க தான் வைக்கணும் .
என்னை மாதிரி உள்ள ஒன்டிகட்டைகளின் சமையல் கலை ,எப்படி இருக்குனு சொல்லுங்க .
சரி என் புராணத்தை ஏன் பாடுவேன் ,சரி சமையல் கூடத்திற்கு செல்லலாம் ,
இதற்கு வேண்டிய சேர்வைகள்.
1 கண்டிப்பா சிக்கன் வேணும் ,ம்... ஒரு கிலோ எடுத்துகோங்க
2 வெங்காயம் நடுதரத்தில் - 3
3 தக்காளி நடுதரத்தில் - 2
4 தேங்காய் துருவல் - அரை மூடி
5 மிளகாய் வத்தல் பொடி- 3 டி ஸ்பூன்
6 நல்ல மிளகு பொடி - அரை டி ஸ்பூன்
7 மஞ்சள் பொடி - 1 டி ஸ்பூன்
8 மல்லி பொடி - 3 டி ஸ்பூன்
9 கரம் மசாலா பொடி - 2 டி ஸ்பூன்
10 உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.
இனி முதல் கட்டமாக செய்ய வேண்டியவை
வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
தக்காளியை சிறு துண்டங்களாக வெட்டி கொள்ளவும்.
தேங்காய் துருவலை நன்றாக மிக்சியில் அறைத்து கொள்ளவும்.
எல்லா பொடி வகைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு வாணலியில் வறுத்து தனியாக வைக்கவும்.வறுக்கும் போது கவனிக்கவும் கருகி போய் விட கூடாது ,நல்ல மணம் வரும் போது நிறுத்தி விடவும்.
இரண்டாம் கட்டம் .
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி ,சூடானதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும் .
சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளியையும் உடன் உப்பையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் ,சிக்கன் சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும் ,தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.
சிக்கன் ஓரளவு வெந்ததும் வறுத்து வைத்திருக்கும் மசாலா பொடிகளை சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும் .
நன்றாக வெந்ததும் ,அறைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
பத்து நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
தேவை என்றால் சிறிது கறி வேப்பிலையோ ,மல்லி இலையோ சேர்த்து பரிமாறவும் .
நீங்களும் சமைத்து பார்த்து விட்டு ,இந்த பதார்த்தத்திற்கு ஒரு நல்ல பெயர் இடவும்.
வாங்க வந்து நல்ல பெயர் வையுங்க ........
.